வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் என்று இரண்டிலும் இன்றைய இளய சமூகத்துக்கு குழப்பம் உண்டு . அதாவது வாக்கிய பஞ்சாங்கம் என்பது நமது முன்னோர்கள் கணித்து அளித்த காலக்கணக் கை அடிப்படையாக கொண்டு , அவர்கள் பாடிய பாடல் செய்யுள்களை அடிப்படையாக கொண்டது.
இதை அவ்வப்போது காலத்திற்கேற்ப திருத்தி அமைக்கவும் சொல்லப்பட்டுள்ளது .கோயில்களில் நடக்கும் திருவிழா உள்ளிட்டவைகளுக்கு பாரம்பரியமாக உள்ள வாக்கிய பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றனர்.நம் முன்னோர்கள் போல துல்லியமாக காலத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இன்று குறைவு.
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அப்படி திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கம் தான் திருக்கணித பஞ்சாங்கம் என்பது , அதாவது தொலைநோக்கிகள் உள்ளிட்டவைகளை கொண்டு சூரிய உதயத்தின் நேரத்தை இடத்திற்கு இடம் மாறுபடும் சரியான கால அளவை மற்றும் கிரகங்களின் நகர்வுகளை கணக்கிட்டு வழங்கும் பஞ்சாங்கம் திருகணித முறை பஞ்சாங்கம். இது சோதிடம் உள்ளிட்டவைகளை கணிக்க துல்லியமாக பயன்படும்.