நகைச்சுவை நடிகராக நடித்து கதையின் நாயகனாக உயர்ந்து ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘கிக்’ படத்திற்காக, அவர் பின்னணி பேசி வருகிறார் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக பிரத்யேக புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான பிரசாந்த் ராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்கி வரும் திரைப்படம் ‘கிக்’. இதில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ஹோப் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ராகினி திரிவேதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜென்யா இசையமைத்திருக்கிறார். எக்சனும் நகைச்சுவையும் கலந்து தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நவீன் ராஜ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக நடிகர் சந்தானம் நடித்திருக்கும் காட்சிகளுக்கு அவர் பின்னணி பேசி வருகிறார். விரைவில் இப்படத்தில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.