கடந்த வருட இறுதி பகுதியில் தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக அங்கே போராட்டமானது வன்முறையாக வெடித்துள்ளது.
பெரு நாட்டின் அதிபராக இருந்த பெற்றோ காஸ்டிலோ தான் பதவி விலகும் முன்னர் பாராளுமன்றத்தை கலைத்ததன் விளைவால் எம்பிகள் எல்லாம் சேர்த்து வாக்கெடுப்பு மூலம் அவரை பதவி நீக்கம் செய்தனை அடுத்து
நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைப் பெற்றது அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். காஸ்டிலோவை விடுதலை செய்ய கூறி நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும் போராட்டக்காரருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட து.
இந்த கலவரத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 68 பேர் காயம் அடைந்துள்ளதாக்க தகவல் வெளியாகி உள்ளது.