பொருளாதார நெருக்கடியால் பல நாட்டிலும் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில் பாகிஸ்த்தானும் இப்போது பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றது. அங்கே 1kg கோதுமை மாவின் விலை இந்திய பெறுமதியில் 1500 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வால் தமது பிரதான உணவின் அங்கமாக திகழும் கோதுமையை வாங்க வரிசைகளில் மக்கள் நிற்பதுடன் அரசு வழங்கும் குறைந்த விலையிலான கோதுமையை பெறுவதற்கு கூட்டம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு கூட்ட நெரிசலில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் குவிந்து வருகின்றனர். இதுவரைக்கும் அந்த நெரிசலில் மாட்டி 3 பெண்கள் உட்பட மொத்தம் 4 பேர் உயிரை விட்டுள்ளனர்.