செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு

தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு

1 minutes read

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் இரண்டாவது நாவல் பயங்கரவாதி. தமிழ்நாட்டில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் இந் நூலை வெளியிட்டுள்ளது.

இன்று கிளிநொச்சியில் 3மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார். அத்துடன் முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, எழுத்தாளர் வெற்றிச் செல்வி, யாழ் பல்லைக்கழக விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

எம் ஈழ தேசத்தின் படைப்பிலக்கியத்தில் தனித்துவமான படைப்பாளனாக திகழும் தீபச்செல்வன் முன்னர் நடுகல் நாவல் வாயிலாக பெரும் புரட்சி ஒன்றினை செய்திருந்தார். அந் நாவல் சிங்கள இனத்தவரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததுடன் அவர்களின் எண்ணங்களை புரட்டிப்போடுமளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தியருந்தது.

இந்நிலையில் தீபச்செல்வனின் 2 ஆவது நாவலான பயங்கரவாதி யாழ்ப்பாணத்தின் இருண்ட காலத்தையும் வன்னியின் ஒளிமிகுந்த காலத்தையும் அத்துடன் ஒரு மாணவத் தலைவனின் வீரத்தையும் வேட்கையும் காதலையும் தாங்கியதாக நாளை வெளிவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More