இன்று பதவி விலகும் நியூசிலாந்து பிரதமர் மிக குறைந்த வயதில் பதவியேற்று மிக குறைந்த வயதில் பதவியும் விலகும் முதல் பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்ஆவார்.
2017 ஆகஸ்ட 1 ஆம் திகதி நியூஸ்லாந்து தொழிலாளர் கட்சித்தலைவராக பதவியேற்றார்.பின் அதே ஆண்டு 23செப்டெம்பர் மாதம் தனது 37 வயதில் நாடாளுமன்ற தேர்தலில் 2 வது இடத்தை பிடித்து கொண்டார். பின் கூட்டணி அமைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்தார்.
இப்போது தந்து 41 வது வயதி 5 1/2 ஆண்டு கால ஆட் சியின் பின் பதவி விலகுகிறார். இவர் தனது பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை போன வருட முடிவில் தெரிவித்திருந்தார். அவர் அதற்கு கூறி இருந்த காரணம் “இனியும் இந்த பதவியில் இருந்து பொறுப்புக்களை கொண்டு நடத்த ஆற்றல் இல்லை” என்பதே அது இப்படி அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியபடுத்தியது. இவை இவ்வாறு இருக்க இன்று பதவி விலகியுள்ளார்.
இந்த ஆண்டு பொது தேர்தல் நியூசிலாந்தில் நடைபெற இருக்கும் நிலையில் அதிலும் தான் போட்டியிட போவதில்லை என்று கூறியுள்ளார்.இவரது பதவிக்காலம் பெப்ரவரி 7 நடை முறைக்கு வருகிறது.