இன்று பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் கிழக்கு ஹரோ பகுதியில் உமா குமரன் என்னும் ஈழத் தமிழ் பெண் தொழில் கட்சியூடாகப் போட்டியிடுகிறார். உமா குமரன் வெல்வதற்கான அறிகுறிகள் பிரகாசமாக இருப்பதாக அவதானிகள் கருத்துதெரிவித்து வரும் நிலையில் தமிழர்களின் வாக்குகள் வெற்றிக்கான வகிபாகத்தை ஏற்படுத்துமா?
கனடாவில் முதன் முதலாக ராதிகா சிற்சபேசன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே. கனடாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் ஈழத்தமிழரான உமா குமரனும் சாதனை படைப்பாரா? நாளைவரை பொறுத்திருந்து பார்ப்போம்.