தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியுள்ளார்.
பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன.
தேர்தல்கள் ஆணைக்குழுவுகுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார்.
அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால், புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரையில் தேர்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.