கடந்த வங்கி விடுமுறை நாளான திங்கட்கிழமை லண்டனில் மாபெரும் உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் வருடந்தோறும் மே மாதம் நடாத்துகின்ற உதைபந்தாட்ட போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இம்முறையும் கலந்து சிறப்பித்தன.
பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜ சுந்தரம் கலந்து கொண்டார். வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் வெற்றிக் கேடையங்களையும் வழங்கி கெளரவிக்கப்பட்டன. முழு நாள் நிகழ்வாக நடைபற்ற இந்த உதைபந்தாட்ட பெருவிழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.