0
இலங்கையில் இன்றும் நாளையும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் இருந்து, மின்சார உற்பத்திக்குப் போதியளவு நீரை வெளியேற்ற நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது.
நீரேந்து பகுதிகளில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதால், நீரை விடுவிக்க, குறித்த செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, இன்றும் நாளையும் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.