ஈழத்து கலைஞனுக்கு யாழ்ப்பாணம் நாவற்குழி சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வழங்கப்பட்ட கௌரவம்
2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட ம.பிரசாந்தின் புகைப்படத்தையும் அரும் பொருட்காட்சியகத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். சிறப்பிற்குரியது. அந்த கலைஞருக்கும் ஏனைய பட்ட வடிவமைப்பாளருக்கு இது பெரும் ஊக்க சக்தியாக இருக்கும்.
இதனைகாட்சிப்படுத்திய சிவபூமி அரும்பொருட்காட்சியக நிர்வாகத்தினருக்கும் அதனை நிர்வகிக்கும் அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் Aaruthirumurugan Aaruthirumurugan ஐயாவுக்கும் நன்றிகள்.
பட்ட வடிவமைப்பாளர் ம.பிரசாந் வல்வெட்டித்துறையில் இம்முறை நடைபெற்ற பட்டப்போட்டியில் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் முதலிடத்தை பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியது.