0
எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உறுதியான உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அல்ஜசீராவிடம் பேசிய அமைச்சர் அலி சப்ரி, “மோசமான கொள்கைகள் காரணமாக இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கின்றது” – என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரச நிர்வாகம் மக்களின் இன்னல்களைப் போக்கப் பாடுபடுகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.