உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதன்படி நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
“தேர்தலை நடத்தாமல் இந்த அரசால் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும். திங்கள் கொழும்பைச் சுற்றிவளைப்போம்” – என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் அனைத்துத் தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்.