தேர்தல் விடயத்தில் அரசு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றது என்று சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“சிறுவயதில் நாம் கிரிக்கெட் விளையாடும்போது, தோல்வி ஏற்படும் எனத் தெரிந்துவிட்டால் சிலர் பந்தை ஒளித்துவிடுவார்கள். அது சிறுவர் பராயம்.
இதுபோல்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேர்தலைப் பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முற்படுகின்றது.
வாக்குச்சீட்டு அச்சிட காசு இல்லை உட்பட சிறுபிள்ளைத்தனமாகக் காரணங்கள் கூறப்படுகின்றன” – என்றார்.