“மேயர் பதவி ஆசை காட்டி உங்களைப் பலிக்கடாவாக்கிவிடுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டாம் என முஜிபுர் ரஹ்மானுக்கு நானும் தகவல் அனுப்பினேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தேன். அவர் தொடர்ந்தும் எம்.பியாக இருப்பதை விரும்பினேன்” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, எம்.பி. பதவியை முஜிபுர் ரஹ்மான் இராஜிநாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.