சீனாவுக்குச் சொந்தமான இயங்குதளத்தின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் பற்றிய கவலைகள் தொடர்பாக குறுகிய வீடியோ செயலியான TikTok மீது கனடா கூட்டாட்சி மற்றும் மாகாண கூட்டு விசாரணையைத் தொடங்குவதாக கனடாவின் தனியுரிமை ஆணையர் அலுவலகம் நேற்று (23) தெரிவித்துள்ளது.
“டிக்டோக்கின் நடைமுறைகள் கனேடிய தனியுரிமைச் சட்டத்திற்கு இணங்குகின்றனவா என்பதையும், குறிப்பாக, தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் சரியான மற்றும் அர்த்தமுள்ள ஒப்புதல் பெறப்படுகிறதா என்பதை கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு செய்வார்கள்” என்று இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டிக்டோக் குறிப்பாக, அதன் பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் போது அதன் வெளிப்படைத்தன்மைக் கடமைகளை நிறைவேற்றுகிறதா” என்பதை கட்டுப்பாட்டாளர்கள் கவனிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டிக்டோக்கின் தனியுரிமை நடைமுறைகள் பயன்பாட்டைப் பயன்படுத்தும் இளையவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதில் ஆய்வு, குறிப்பிட்ட கவனம் செலுத்தும்” என்று அறிக்கை வெளியீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.