மருத்துவர் ப. விக்கினேஸ்வராவின் முதலாவது ஆண்டு ஞாபகார்த்தமாக திருகோணமலையில் தம்பலகாமம் மேற்கு கொலனியில் உள்ள சிவசக்திபுரம் பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகங்கள், பாடசாலை பை மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் என்பன அன்பளிப்பாக 22/2/23 அன்று வழங்கப்பட்டது.
பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மருத்துவர் ப. விக்கினேஸ்வராவின் திருவுருவப் படத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் விளக்கேற்றி மலர் சூடி அஞ்சலி செலுத்தினார்.
தம்பலகாமத்தில் மிகப் பின்தங்கிய சிவசக்திபுரம் பாடசாலையில் குறைந்த எண்ணிக்கையான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்திலேயே மிகவும் குறைந்த பிள்ளைகள் பயிலும் இப்பாடசாலை, போர்க்காலத்தில் முழுமையாக சிதைவடைந்து இருந்தது. தற்போது உள்ளூர் மக்களின் ஆதரவுடன் இப்பாடசாலை மீள புனரமைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் போர்க் காலத்தில் பணியாற்றிய டாக்டர் ப. விக்கினேஸ்வரா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 22/2/22 காலமாகியிருந்தார்.
அன்னாரின் ஞாபகார்த்தமாக இப் பாடசாலை பை மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஈழத்தின் வடபுல சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகாலம் தன்னுடைய மருத்துவ சேவையின் ஊடாக மக்கள் மனங்களில் பெரும் அபிமானம் பெற்ற மருத்துவர் ப. விக்கினேஸ்வரா. அன்னாரின் ஞாபகார்த்தமாக பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக அத்தியாவசிய கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.