இலங்கையின் இருவேறு பகுதிகளில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..
அம்பலாங்கொடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, பாணந்துறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிங்வத்த மயானத்துக்கு அருகில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர்.
மேற்படி இரு சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.