செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் ‘வடக்கின் சமர்’

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் ‘வடக்கின் சமர்’

2 minutes read

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் “வடக்கின் சமர்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த சனிக்கிழமை மாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

2000த்துக்கும் மேற்பட்ட உதைபந்தாட்ட ரசிகர்களின் மத்தியில்,நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டது.

இதன் போது பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு ஜே ஶ்ரீரங்கா, சிறப்பு விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு த சித்தார்த்தன், முன்னாள் யாழ் மாகாணசபை உறுப்பினர் திரு பா கஜதீபன், யாழ் மாநகரசபை மேயர் திரு  ஆணல்ட், FOU சார்பில் திரு கதிர் குமணன் மற்றும் பல பிரபல்யங்களும், இலங்கை தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்கள்,  ஏனைய விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டு வீரர்கள், உதைபந்தாட்டப் பிரியர்களென 2000க்கும் மேற்பட்டோர் கலந்து மகிழ்ந்தனர்.

போட்டியில் இறுதியில் 3:1 என்ற கோல் வித்தியாசத்தில் பாடும்மீன் வடக்கின் சமன் சம்பியனாகியது. மேற்படி றோயல் கழகத்தினரின் போட்டி மிகவும் நாகரீகமாகவும் சிறப்பாகவும் நடாத்தப்பட்டதை அங்கு பங்குபற்றிய பலராலும் பாராட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More