0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நீக்கம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று வெளியிட்டார்.
டலஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையும் நடத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.