இங்கிலாந்தில் சரியான பராமரிப்பு இல்லாமையால் ஒரு வாரத்தில் 500க்கும் மேற்பட்ட முதியோர்கள் மரணிக்கின்றனர் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
‘Age uk’ என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மை மற்றும் ஒழுங்கான பராமரிப்பு இன்மையால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2021-2022ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,890 பேர் இவ்வாற எந்தக் கவனிப்பும் கிடைக்காமல் மரணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.