0
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஒதுக்கிய நிதியை விடுவிக்குமாறு திறைசேரியின் செயலாளருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலுக்கு திறைசேரி செயலாளர் நேற்றைய தினம் வரவில்லை. இதனால் தன்னிச்சையாக தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியைத் தீர்மானித்தது.
இதையடுத்து தேர்தலுக்கான நிதியை விடுவிக்கக் கோரும் கடிதம் நேற்றைய தினமே தேர்தல்கள் ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.