இங்கிலாந்தில் “மிஸ்டிக் மெக்” (Mystic Meg) என்று மிகவும் பிரபல்யமாக அறியப்படும் தொலைக்காட்சி ஜோதிடர் மார்கரெட் லேக் (TV astrologer Margaret Lake), தனது 80ஆவது வயதில் காலமானார்.
1990களில் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த இவர், அந்நாட்டு தேசிய சீட்டிழுப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
அத்துடன், சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த ஜோதிடராகவும் மார்கரெட் லேக் அறியப்பட்டு வந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இவர் காலமானார்.