ஜெர்மன், பெர்லின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து, பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படவுள்ளது.
மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் அவர் ஒரு நீச்சல் குளத்தில் இருக்கும்போது அவர்தம் உடலை மறைக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக இன்னொரு பெண் கூறினார்.
அவர்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதாக ஒப்புக்கொண்ட அதிகாரிகள், பெர்லினின் பொது நீச்சல் குளங்களுக்கு வரும் அனைவரும் மேலாடையின்றிச் செல்வதற்கு உரிமை பெற்றுள்ளதாகக் கூறினர்.
ஃப்ரீகோர்பர்குல்டுர் என்று ஜெர்மன் மொழியில் ‘சுதந்திர உடல் கலாசாரம்’ என்று அழைக்கப்படும் விஷயத்தை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்கிறார்கள்.
ஜெர்மனிக்கு வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள், அதன் ஏரிகளில் நிர்வாணமாக ஜெர்மன் மக்கள் பொழுதைக் கழிப்பது, பூங்காக்களில் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டு குறட்டை விடுவது, நீராவிக் குளியல் போடுவது போன்றவற்றைப் பார்த்து அடிக்கடி ஆச்சர்யப்படுவார்கள், சில நேரங்களில் அதிருப்தி அடைவார்கள்.
ஆனால், சில இடங்களில் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதைப் பொருத்தமான ஒன்றாகவும் ஆரோக்கியமான ஒன்றாகவும் கருதும் நாடாக ஜெர்மனி உள்ளது.
மூலம் – பிபிசி