இந்தியா – தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு நாளை திங்கட்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இத்தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4,03,156 மாணவர்களும், 4,33,436 மாணவிகளும் என மொத்தம் 8,36,593 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
இவர்களில் 23,747 பேர் தனியார் பரீட்சார்த்திகள் ஆவர்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக் கைதிகள் 90 பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.
3, 225 பரீட்சை நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்புப் பணிகளில் 46,870 ஆசிரியர்களும், முறைகேடுகளைத் தடுக்க 4,235 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு அறைக்குள் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லவும், ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டம் மற்றும் பயம் இல்லாமல் பொதுத்தேர்வை எழுதுமாறும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகள் என்றும் தமிழ்க முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.