ஆஸ்கர் விருது :
ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்களான கீரவாணி, கார்த்திகிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.
“மதிப்புமிக்க ஆஸ்கர் விருதை பெற்றுள்ளகீரவாணி, கார்த்திகிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமைமிகு இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்” என தனது வாழ்த்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்
நீலகிரி மாவட்டம் – முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.
நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை, கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.
ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி – ஆஸ்கர் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’