சம்பள உயர்வுக் கோரி இங்கிலாந்தின் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளநிலை வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு, பணிச்சுமை, ஊதியக்குறைப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து தேசிய மருத்துவ சேவையின் மருத்துவ பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை வைத்தியர்கள் என்பதால், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.