செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் உடல் ஆரோக்கியம் தரும் குரக்கன் புட்டு

உடல் ஆரோக்கியம் தரும் குரக்கன் புட்டு

1 minutes read

தேவையான பொருட்கள்

2 கப் குரக்கன் / ராகி மா
1 கப் தண்ணீர் (-/+)
1 கப் தேங்காய்ப்பூ (-/+)
உப்பு

செய்முறை:
குரக்கன் / ராகி மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுள் நன்கு கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு குழைக்கவும். அதன் பின்பு கையால் உதிர்த்தி குழைக்கவும்.
குழைத்த குரக்கன் / ராகி மாக்கலவையை நீராவியில் அவித்து எடுக்கவும். புட்டு அவிந்து வாசனை வந்ததும், அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். உடனே குரக்கன் புட்டை உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ சேர்த்துக் கிண்டி விடவும். புட்டுடன் சீனி / சர்க்கரை / வாழைப்பழம் சேர்த்து பரிமாறவும்.
சுவையான குரக்கன் புட்டு / ராகி புட்டு தயார்!

குறிப்பு:
குரக்கன் மாவை எந்த அளவு கப் / பேணியில் தட்டி அளக்கின்றர்களோ, அதே அளவு கப் / பேணியில் ½ பங்கு தண்ணீர் புட்டுக்கு போதுமானது.
2 கப் மா : 1 கப் தண்ணீர்.
குரக்கன் புட்டை குழல் புட்டாகவும் அவிக்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More