உக்ரைனுக்கு MiG-29 போர் விமானங்கள் நான்கை அனுப்ப போலந்து முடிவு செய்துள்ளது.
இதன்படி, உக்ரைனுக்கு MiG-29 ரக போர் விமானங்களை அனுப்பும் முதலாவது நேட்டோ நாடாக போலந்து மாறவுள்ளது.
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டூடா (Andrzej Duda) எதிர்வரும் நாட்களில் உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், போர் விமானங்களை வழங்க வேண்டும் என்ற உக்ரைனின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு, அவ்வாறு செய்யும் முதல் நேட்டோ நாடு போலந்து ஆகும்.