சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் என சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் மூன்று நாட்களுக்கு சீன ஜனாதிபதி தங்கியிருப்பார் என்றும் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே முக்கிய உடன்பாடுகள் கைச்சாத்திடப்படும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முக்கிய அனைத்துலக நிலவரம் பற்றியும் கருத்துகளைப் பரிமாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.