இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை (Indian High Commission) காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்கி, இந்திய தேசியக் கொடியை கழற்றி வீசியுள்ளனர்.
மஞ்சள் நிற காலிஸ்தான் கொடியை ஏந்திய ஆண்கள், உயர் ஸ்தானிகராலய கட்டிடத்தில் மூவர்ணக் கொடியை கழற்றுவதை காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
மார்ச் 19ஆம் திகதி நடத்தப்பட்ட லண்டனில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மீதான இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லண்டனிலுள்ள குறித்த கட்டடத்தில் சிலர் கும்பலாக வந்து ஜன்னல்களை உடைத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து ஒருவர் உள்ளே சென்று இந்திய தேசிய கொடியை கழற்றிக் கொண்டிருப்பதைப் போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று நம்பப்படுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தச் சம்பவம் குறித்துப் லண்டன் மேயர் சாதிக் கான், “நடந்த வன்முறை சீர்குலைவு மற்றும் நாசவேலைகளை” கண்டிப்பதாகவும், இது போன்ற நடத்தைக்கு அங்கு இடமில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.