3
எப்படியாவது பாடிவிடு பறவையே
வெளி எத்தகைய கூர் ஆயுதம் என்பதை
திக்கற்று தீட்டப்பட்ட ஆயுதத்தில் பயணிப்பதை
தீக்குன்றுகள் எதிர்படுவதை
உறைமழையின் கடினத்தை
நீரின் நித்திய தாகத்தை
நிலத்தின் தழும்புகளை
பாதாளத்தின் மென்மையை
காடுகளின் நியாயப்பிரமாணத்தை
வாழ்வின் ஆயல் மொழியை
கூட்டின் இளமையை
காற்றின் உடல் ருசியை
காலத்தின் கருந்தகடுகளை சுழற்றி
எப்படியாவது பாடிவிடு பறவையே
•
– தேன்மொழி தாஸ்
13.3.2018
10.23 pm