கனடாவின் மக்கள்தொகை 2022ஆம் ஆண்டில் 2.7% வளர்ச்சியடைந்துள்ளது. இது மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையான வேகமான விரிவாக்கம் ஆகும்.
ஜனவரி 1ஆம் திகதி வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் நாட்டின் மக்கள் தொகையில் 1,050,110 பேர் இணைந்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு மொத்த மக்கள் தொகை 39,566,248 ஆகக் கொண்டு வந்துள்ளதாக புதன்கிழமை தெரியவந்துள்ளது.
இது சர்வதேச இடம்பெயர்வு வளர்ச்சியில் 95.9% ஆகும். புதியவர்களுக்கு கதவுகளைத் திறந்து விடுவது, வயதான மக்களின்பொருளாதார இழுவையை எதிர்கொள்ளும் கனடாவின் முடிவுக்கு ஒரு சான்றாகும்.
ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உயர்வடைந்தது இதுவே முதல் முறையாகும்.
அதே நேரத்தில் அங்கு ஓய்வூதிய வயதை உயர்த்துவது உட்பட மக்கள்தொகை சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.
இந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் நீடித்தால், சுமார் 26 ஆண்டுகளில் கனடா இரட்டிப்பாகும் என்று புள்ளிவிவர நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் சுமார் அரை மில்லியன் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை இணைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் திட்டத்தின் விளைவாக இந்த சாதனை விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்றுக்கு பதிலளித்தவர்களில் 52 சதவீதமானவர்கள் ட்ரூடோவின் திட்டம் கனடாவின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.