கனடாவில் ஒன்பது நாட்களுக்கு முன்பு தீப்பிடித்த பாரம்பரிய கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஐந்தாவது உடல் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரைக் காணவில்லை என்றும் மாண்ட்ரீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பழைய மாண்ட்ரீல் கட்டிடத்தில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால், சனிக்கிழமை பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் Véronique Dubuc கூறுகிறார்.
எரிந்த நிலையில் உள்ள மற்றவர்களைத் தேடும் பணி தொடர்வதால், அடையாளம் காண உடல் நோயியல் நிபுணரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டுபக் கூறுகிறார்.
இடிபாடுகளில் ஏழுக்கும் மேற்பட்ட உடல்களைக் கண்டுபிடிப்போம் என்று நினைக்கவில்லை என்று பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை.
தீ விபத்தில் காணாமல் போனவர்களில் சிலர் குறித்த கட்டடத்தில் தங்களுடைய தங்குமிடங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.