புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா 22 நாடுகளை கடனில் சிக்கவைத்துள்ள சீனா

22 நாடுகளை கடனில் சிக்கவைத்துள்ள சீனா

1 minutes read

2008 மற்றும் 2021க்கு இடையில் 22 வளரும் நாடுகளுக்கு சீனா 240 பில்லியன் டொலரை செலவழித்துள்ளது. மேலும், “Belt & Road” உள்கட்டமைப்புக்காக செலவழித்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பல நாடுகள் சிரமப்பட்டதால், அண்மைய ஆண்டுகளில் இந்த தொகை உயர்ந்துள்ளது.

உலக வங்கி, Harvard Kennedy School, Aid Data மற்றும் Kiel Institute for the World ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின்படி, 2016 மற்றும் 2021க்கு இடையில், முக்கியமாக அர்ஜென்டினா, மங்கோலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நடுத்தர வருமான நாடுகளுக்கு கிட்டத்தட்ட 80% மீட்புக் கடன் வழங்கப்பட்டது.

வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பை உருவாக்க சீனா நூற்றுக்கணக்கான பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது. ஆனால், பல திட்டங்களில் எதிர்பார்த்த கடன்தொகையை திருப்பி செலுத்தத் தவறியதால் 2016ஆம் ஆண்டிலிருந்து கடன் வழங்கப்படவில்லை.

“பெய்ஜிங் இறுதியில் அதன் சொந்த வங்கிகளை மீட்க முயற்சிக்கிறது. அதனால்தான் இது சர்வதேச பிணை எடுப்பு கடன் வழங்கும் அபாயகரமான வணிகத்தில் இறங்கியுள்ளது” என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும் ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவருமான கார்மென் ரெய்ன்ஹார்ட் கூறினார்.

கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு சீனக் கடன்கள் 2010 இல் 5% க்கும் குறைவாக இருந்த நிலையில், 2022 இல் 60% ஆக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

111.8 பில்லியன் டொலர் அர்ஜென்டினாவும், பாகிஸ்தான் 48.5 பில்லியன் டொலர்களும், எகிப்து 15.6 பில்லியன் டொலர்களும் கடனாக பெற்றுள்ளன.

ஒன்பது நாடுகள் $1 பில்லியனுக்கும் குறைவாகவே பெற்றுள்ளன.

அந்தத் தரவுகளின் அடிப்படையில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவ்வாறு கடன் பெற்ற நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More