அம்பாந்தோட்டை, பழைய புந்தல வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாரிய வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபருக்குச் சுமார் 30 வயது இருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.