1
அரசியல் ஒரு பெரிய சரித்திரம் தான்
ஆனால் என் நாட்டில் இவை வேடிக்கை
சாகசங்களாக நடந்து கொண்டிருக்கிறது !!!!
ஒவ்வொரு புதிய ஆசனத்திலும்
மறைமுகமாகத் தொடுக்கப்படும்
இணைப்புக் கயிறுகள்,
வெளியில் எதிரிகளாக
முக மூடிகள் அணியும் வித்தைக்காரர்கள் !!!!
நாற்காலிகளில்
சிறு நீர் கழித்து
அதிலே ஏறி அமர்ந்து கொள்ளத் துடிக்கும்
குட்டை நாய்கள் !!!!
தவிடு பூசிய
இருட்டு அறைகளுக்குள்
வெளிச்சத்தைப் பரப்பி,
வெளிச்சத்தைப் பரப்பி,
அரிசி கொறிக்கும் மூட்டைப்பூச்சிகள் !!!
தாம் உருவாக்கிய
பெரிய கட்டுப் புத்தங்களிலில்
அச்சிடப்படும்,
நிகரற்ற தீர்மான வடிவங்களை
கிறுக்குவதற்கு பயன்படுத்தும்
கிறுக்குவதற்கு பயன்படுத்தும்
மையற்ற பேனைகள் !!!!
ஆகாயக் கடல் கடந்து வரும்,
வித விதமான பணத் தாள்களை
வெறும் சில்லறைகளாக
வெளிக் காட்டும்
பெரிய புதையல் உண்டியல்கள் !!!!
குடில்களை உருவி
அதன் சாற்றில்
அடுக்கு மாடிக் கட்டிடங்களை பெருப்பித்து,
பேத்தை வண்டிகளை
சொகுசுப் படிகளில்
தூக்கி நடக்கும் பீ வண்டுகள் !!!
இலை, துளிர் கண்ட இடமெல்லாம்
பெரிய துளைகள் இட்டு,
வழிபாட்டுத் தலம் காணும்
புதுவித சாஸ்திரிகள் !!!!
தம் உடம்பில்
முட்புதர்கள் வளர்த்து
அடிமைகளை மேயவிடும்
வறல் நிலங்கள் !!!!
உழைத்தவரின் வியர்வைகளை பிடுங்கித்தின்ன,
உப்புக் கஞ்சிகளைப் பருக்கி விட்டு,
அவர்களின் மூட்டைகளை
வேற்று நாட்டவர்க்கு
பேரம் பேசும் தந்திர முதலாளிகள் !!!
இது தான் எம் நாட்டின்
சிறந்த அரசியல்
இன்னும் எத்தனையோ
தெரிந்தும் தெரியாமலும்
நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது,
இனியும் இவைதான்
நிகழப் போவதாகவும் இருக்கும் !!!!
முல்லையின் ஹர்வி