ரசியா -உக்ரைன் போர் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில் இப்போது இரு நாடுகளும் வலுவையும் அதிகரிக்க பாடுபட்டு வருகிறது , நட்பு நாடுகள் மிகவும் முயற்சி செய்து வருகின்றனர்.
திடீர் என ரசியா ஒரு சோதனை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு ஏவுகணையை செலுத்தி அந்த கப்பலை அழிக்கும் பரிசோதனையே அதுவாகும். இந்த பரிசோதனை ஜப்பான் கடல் எல்லைக்கு வெளியில் பீட்டர் தி க்ரேட் வளைகுடாவில் வைத்து நடைபெற்றுள்ளது.
மொஸ்கிட் குரூஸ் வகை ஏவுகணைகளே அவை, 60 மைல்களுக்கு அப்பால் இலக்குகளை கூட அது துல்லியமாக தாக்கியுள்ளது .
இவ்வாறு ரசியாவின் ராணுவ நடவடிக்கை அதிகரிப்பதை ஜப்பான் அவதானித்து கொண்டு இருப்பதாக அறிக்கை ஒன்றையும் அறிவித்துள்ளது.
ரசியா தனி நாடாக தன் பலத்தை அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆரம்பத்தில் இருந்து உதவி செய்து வரும் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி தாங்கிகள் வழங்க உறுதி செய்துள்ளது .
லெப்பர் 2 வகை 18 டேங்குகள் ஜெர்மனி உறுதி அளித்தபடி கடந்த திங்கள் பிற்பகுதி வழங்கியுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிடோரியஸ் அறிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து சேலஞ்சர் டாங்கிகளை உக்ரைஉனுக்கு வழங்கியுள்ளதுடன் அமேரிக்கா எம்1 ஏ 2 ஆப்ராம்ஸ் டாங்கிகளையும் ஷுவீடன் 10 டேங்குகளையும் வழங்கவுள்ளது.