பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் பயணித்த பயணிகள் படகில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்ததாகவும், 230 பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து ஜோலோ தீவுக்கு சென்று கொண்டிருந்த லேடி மேரி ஜாய் என்ற படகு, பலுக்-பாலுக் தீவுக்கு அருகில் சென்றபோது இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, கடலோரக் காவல்படை மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, பணியாளர்கள் மற்றும் பயணிகளை உள்ளடங்கலாக 35 பேரை மீட்டனர்.
விபத்தில் 14 பேர் காயமடைந்ததாகவும், 7 பேரின் விவரங்கள் தெரியவில்லையெனவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.