மியன்மார் இராணுவம், முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் (Aung San Suu Kyi) ஜனநாயக தேசிய லீக் கட்சி உள்ளடங்கலாக அந்நாட்டின் 40 அரசியல் கட்சிகளைக் கலைத்தமையை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.
அமெரிக்காவைப் போன்றே இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கு, முன்னாள் ஆளுங்கட்சியான ஜனநாயக தேசிய லீக்கும் இதர 39 கட்சிகளும் மீண்டும் பதிவுசெய்யத் தவறியதால், அவற்றை அந்நாட்டின் தேர்தல் குழு கலைத்தது.
அந்தத் தேர்தல் குழுவில் பெரும்பாலும் இராணுவ அதிகாரிகளே அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி : மியான்மரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு