செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ராசி இல்லாத ராஜாவாகிறாரா ‘அமீர்’?

ராசி இல்லாத ராஜாவாகிறாரா ‘அமீர்’?

1 minutes read

இயக்குநரும், நடிகருமான அமீர், தமிழ் திரையுலகில் ராசியில்லாத பிரபலம் என்ற நிலையை நோக்கி உயர்ந்து வருவதாக அவரை தொடர்ந்து அவதானிக்கும் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

‘மௌனம் பேசியதே’ எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தாலும், ‘பருத்திவீரன்’ எனும் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் அமீர். இப்படத்தை தொடர்ந்து ‘யோகி’ எனும் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு கதையின் நாயகனாகத்தான் வலம் வருவேன் என்று மனதிற்குள் சபதம் எடுத்து, திரையுலகில் தனக்கான வாய்ப்புகளை தேட தொடங்கினார்.

இந்நிலையில் அவரது நண்பரும், இயக்குநருமான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ எனும் திரைப்படத்தில், வடசென்னை மக்களில் ஒருவராக பொருந்தாத கதாபாத்திரத்தில் வலிந்து நடித்திருந்தார்.

அந்தப் படம் வெளியான பிறகு அவரைத் தேடி வாய்ப்புகள் வரவில்லை. 2018 இல் வெளியான இந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. தனுஷ் நடிப்பில் உருவான ‘மாறன்’ எனும் திரைப்படமும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் இவர் நடிப்பில் திரைப்படங்கள் தயாராகி வருவதாக அறிவிப்புகள் மட்டும் சீரான இடைவெளியில் வெளிவந்து கொண்டிருக்கும். ‘பேரன்பு மிக்க பெரியோர்களே..’ எனத் தொடங்கப்பட்ட படம், அதன் பிறகு ‘நாற்காலி’ என பெயர் மாற்றம் பெற்றது.

அதன் பிறகு இந்த திரைப்படம் தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என பெயர் மாற்றம் பெற்று, வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

இதனிடையே இவரது நடிப்பில் ‘சந்தன தேவன்’, ‘ஜிஹாத்’, ‘பாண்டிய வம்சம்’ ஆகிய பெயர்களில் படங்கள் தயாராவதாக அறிவிப்பு மட்டும் வெளியானது. ஆனால் எந்த படங்களும் முழுமையாக நிறைவடையவில்லை.

திரையுலகில் வரவேற்கக்கூடிய உணர்வுபூர்வமான படைப்பாளியாக இருந்தாலும், சொந்த வாழ்வில் தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அமீர், அரசியல் மற்றும் பொதுவெளியில் இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை கண்டித்து தன்னுடைய எண்ணத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் புதிய திரைப்படம் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

இவரும், இஸ்லாத்தில் அண்மையில் இணைந்தவருமான யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து புதிய திரைப்படத்தை வழங்கவிருப்பதாக இருவரும் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த திரைப்படமாவது தயாராகி, முழுமையடைந்து, எந்தவித தடையும் இல்லாமல் பட மாளிகையில் வெளியாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More