11
வானத்தில் வண்ணமாய்
பூக்கள் பூக்குது
வாசலை திறந்து வந்து
காலை புலருது
காலை புலர்ந்ததென்று
யார் சொன்னது
காற்றினில் கீதம் ஒன்று
கனவில் சொன்னது
மீட்டிடும் கைகளினால்
வீணை பாடுது
விடியுதோர் காலம் என்று
கீதம் கேக்குது
ஆலய மணி ஓசை
காதில் கேக்குது
அன்பே சிவம் என்று
சொல்லி கேக்குது
ஆனந்த யாழினிலே
ராகம் கேக்குது
அழகிய கதிரவன்
கண்ணைத் திறக்கிறான்
ஆயிரம் பூக்களின்
அழகு சிரிக்குது
காலைப் பறவைகள்
பாடல் இசைக்குது
எந்தன் மன அறைக்குள்
இருந்து ஒரு மணி ஓசை கேக்குது
மௌனமாக கனவு வந்து
கவிதை பாடுது
கனவுகள் உயிர்த்தொரு
காலம் பிறக்குது
காலைப் பொழுதொன்று
மெல்ல விடியுது.
பா.உதயன்