புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டத்தை மீற எவருக்கும் இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்

சட்டத்தை மீற எவருக்கும் இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்

3 minutes read

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம், ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டுக்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார.

முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துச் சுதந்திரத்துக்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீதிகளில் வன்முறைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை எனவும் வலியுறுத்தினார்.

சரியானதை செய்ய அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக என்பதை அறியவே, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதனை உதாரணமாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், புதிய சிந்தனைகளுடன் புதிய பயணத்தைத் தொடர்ந்தால் 25 வருடங்களுக்குள் பெரும் அபிருத்தியை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

அதற்காக முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக தேவையென வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடந்த காலங்களில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பராட்டினார்.

முப்படையினர் இந்தப் பணியை செய்யத் தவறியிருந்தால் இன்று நாடு வன்முறை நிறைந்த பூமியமாக இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேபோல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கிடையில் இடையிலான போட்டித் தன்மை, இந்து சமுத்திர வலயத்தை பெரிதும் பாதிக்கும் எனவும், இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அந்தப் பாதிப்பிலிருந்து இலங்கையை மீட்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

நடத்து முடிந்த போராட்டங்களை போல் அல்லாது எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்தப் போராட்டங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாக அமையும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தொழில்நுட்பத் தெரிவுடன் கூடிய முப்படையினரை உருவாக்குவதற்காகவே “பாதுகாப்பு – 2023″ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் – ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகப் படையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி வைஸ் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் 1,200 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More