புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனையில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர் வழங்கப்பட்டு ஈராண்டுகள் கடந்துவிட்டன. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார்.