செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை உலக சுகாதார தினம் – யாழ் ஆரோக்கிய நகர செயற்திட்டம் மீதான ஓர் பார்வை

உலக சுகாதார தினம் – யாழ் ஆரோக்கிய நகர செயற்திட்டம் மீதான ஓர் பார்வை

3 minutes read

உலக சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட தினமான ஏப்ரல் 7 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினமானது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமாகும் . இது உலகின் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒன்றாகும். உலக சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளினை மையமாக கொண்டு கொண்டாடப்படுகின்றது. இக் கருப்பொருளானது  பிரதானமாக தற்காலத்தில்  உள்ள சுகாதார பிரச்சினைக்கான ஓர் கவனத்தையும் விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த வருடம் ” அனைவருக்கும் சுகாதாரம்” என்ற  கருப்பொருளினை மையமாக கொண்டுள்ளது .

ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தி வருகின்றது . அந்த நாட்டில் உள்ள நகரங்கள் பொதுவாக முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நகரம்கள் ஒரு  முக்கிய பங்காகும்.  ஏனெனில் அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வளர்ச்சி அடைந்துவரும் உட் கட்டமைப்பு வசதிகள் என்பன முறையான சுகாதாரத்தை அணுகுவதற்கு தடையாக இருக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனமானது பல தசாப்தங்களாக ஆரோக்கிய நகரங்களை உருவாக்குவதில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் உலக சுகாதார ஸ்தாபனதின் ஆரோக்கிய நகர திட்டம் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். ஆரோக்கிய நகரம் என்பது பௌதிக மற்றும் சமூக சுழலினை மேம்படுத்தி கொள்வதோடு அங்கு வாழும் மக்கள் தமது திறன்களை வளர்த்துக்கொண்டு ஓர் ஆரோக்கியம் மிக்க வாழ்க்கையை தாமாக ஏற்படுத்தி கொள்வதற்கு வழிபடுத்துவதொன்றாகும்.

இச்செயற்திட்டமானது பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியுள்ளது.

இச்செயற்திட்டமானது யாழ் மருத்துவபீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ அலகின் நேரடி ஒருங்கிணைப்பு  மற்றும் நடைமுறைப்படுத்தலில் யாழ் மாநகர சபை, சுகாதார சேவைகள் திணைக்களம் ,  யாழ் மாவட்ட செயலகம், யாழ் பிரதேச செயலகம், மாகாண கல்வி திணைக்களம் , மேலும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்ரின் பிரதான ஒத்துழைப்புடன் “ யாழ் ஆரோக்கிய நகர திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத் திட்டமானது 5 பிரதானமாக  கருப்பொட்களான கழிவு முகாமைத்துவ மேம்பாடு, போசாக்கான உணவு மேம்பாடு, உடல் மற்றும் உள ஆரோக்கிய மேம்பாடு, நீர் மற்றும் சுகாதார மேம்பாடு அத்துடன் தொற்றா நோய்களுக்கான தடுப்பு  என்பவற்றை நோக்கமாக கொண்டு செயட்பட்டு வருகின்றது .

 இது 3 சுற்று சூழல்களான   பாடசாலை,  பொது இடங்கள், அலுவலகங்கள்  மற்றும் நிறுவனங்கள் என்பவற்றில் ஆரோக்கியத்தை மேம்படுத்திவதனை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவ சுகாதார மேம்பாட்டிற்கு பிளாஸ்டிக் பாவனை  அற்ற பாடசாலையை உருவாக்குவதற்க்காக பயிற்சி பட்டறைகளை இத்திட்டம் மேற்கொண்டு வருகின்றது. யாழ் மாநகர சபைக்குள் அடங்கும் 23 பாடசாலைகளில் எமது பயிற்சிகளை நடாத்தி உள்ளோம். மேலும் நீர் மற்றும் சுகாதார மேம்பாட்டின் கீழ் பாடசாலைகளில் பெண் மாணவர்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் எனும் பயிற்சி பட்டறையினை வழங்கி வருகின்றோம். மேலும் சில அது தொடர்பான கற்றல் புத்தகங்களை உருவாக்கி விநியோகித்து வருகின்றோம் . உடல்  மற்றும் உள ஆரோக்கிய மேம்பாட்டிற்காக  பாடசாலை மாணவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டி பாவனையை அதிகரிப்பதற்காக கடந்த வருடம் துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பயணம் ஒன்றை நடத்தி தொடர்ந்து அதனை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பதற்கான சூழலை உருவாக்குவதில் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றோம். மேலும் பாடசாலை தோட்டம் என்ற எண்ணக்கரு ஊடாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலையில் மாணவர்களின் போசணையை அதிகரித்து கொள்ள சுகாதாரமான சிற்றுண்டி சாலைகளை உருவாக்குவதற்கு திடம்களை மேடற்கொண்டு  வருகின்றோம்.

இவ்வாறு நாம் எமது ஆரம்ப கட்ட  நடவடிக்கைகளை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது இச் செயற்பாடுகளை அலுவலகம்கள் மற்றும் பொது இடம்களில் மேற்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம் .

நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மட்டுமே  எமது நகரை ஓர் ஆரோக்கியம் மிக்க நகராக மாற்ற முடியும் . எம் ஒவ்வொருவரின் எமது நகரை ஆரோக்கியத்தின் பாதையில் கொண்டு செல்வத்துக்கான சிறிய முயற்சியும் எமது நகத்தின் ஆரோக்கியமான பயணத்திற்கு வழிவகுக்கும் .

ஆரோக்கியமான மக்கள் , ஆரோக்கியமான நகரம், ஆரோக்கியமான நாடு.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட கட்டுரை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More