அமெரிக்காவின் கென்டக்கி (Kentucky)மாநிலத்தின் லுயிவில் (Louisville) நகரில் இயங்கும் Old National Bank எனும் வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி வங்கி ஊழியர் ஒருவரே, சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
23 வயதுடைய குறித்த வங்கி ஊழியரும் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் 146 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.