சிலி நாட்டில் தொழிலாளர்களின் வார வேலை நேர மசோதா அதிக வாக்குகளின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு வாரத்திற்கு 45 மணி நேரமாக இருந்த வேலை நேரம், 40 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.வேலை நேரத்தைக் குறைப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு 127 பேர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் 14 மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அதிகப்படியான ஆதரவுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிலி பிரதமரான கேப்ரியல் போரிக் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இதன் மூலமாக சிலி தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் முன்னுரிமை பெரும் நிலையை எட்டியுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 48 மணி நேரத்தில் இருந்து 45 மணி நேரமாகக் குறைத்த நிலையில், தற்போது மேலும் 5 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.