செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு

பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு

0 minutes read

தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் புமியோ கிஷிடா இன்று காலை பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, நபர் ஒருவர் கையெறி குண்டு ஒன்றை பிரதமரை நோக்கி வீசியுள்ளார்.

இதனையடுத்து, குண்டு வெடித்து புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். குண்டு வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.