ரசியா – உக்ரைன் போர் தொடர்ச்சியாக நடை பெற்று வரும் நிலையில் மிகப் பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரசியாவை எதிர்த்து தாக்கும் அளவில் உக்ரைன் போர் தொழில் நுட்பம் காணப்படுகிள்றது என்று பலர் கூறி வருகின்றனர்.
ரசியா கிழக்கு உக்ரைனில் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ,8பேர் பலியாகி உள்ளனர் 21 பேர் காயமடைந்தனர்.
குறிப்பாக ஸ்லோவியன்ஸ்க் நகரில் ரசியா படைகளை s -300 ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது . இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.
இந்த தொடர் போரில் ,பாகமுட நகரை நாலாபுறமும் சூழ்ந்து ரஷிய படைகள் தாக்குதல் நிகழ்த்தி வரும் முலையில் ஷலோவியன்சாக் நகரையும் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.