பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றது குறித்து இங்கிலாந்து பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட பின்னர், லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் வெளியீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான எர்னஸ்ட் மோரெட், திங்கட்கிழமை மாலை லண்டன் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பாரிஸிலிருந்து ரயிலில் வந்த பிறகு, செயின்ட் பான்கிராஸ் நிலையத்தில் சாதாரண உடையில் இருந்த இரண்டு அதிகாரிகளால் அணுகப்பட்டார்.
ஆறு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவரது அலைபேசி மற்றும் கணினியில் கடவுச்சொற்களை வெளியிட மறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.